சீன ஊடகக் குழுமம், ஹங்கேரியின் ஊடகச் சேவை ஆதரவு மற்றும் சொத்துமேலாண்மை நிதியம், ஹங்கேரியிலுள்ள ஹங்கேரி-சீன நட்புறவு சங்கம் ஆகியவை கூட்டாக
ஏற்பாடு செய்த சீன-ஹங்கேரி பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வு உள்ளூர் நேரப்படி
செப்டம்பர் 26ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும்
, சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென்
ஹாய்சியொங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
தன்னுடைய
உரையில் சீன-ஹங்கேரி மக்களின் புரிந்துணர்வு மற்றும் நட்புறவை சீன ஊடகக் குழுமம்
எப்போதுமே முன்னேற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஹங்கேரி நண்பர்களுடன் இணைந்து மேலதிக
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் நட்புறவை வலுப்படுத்தி,
மனித குலப் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற
விரும்புவதாகவும் தெரிவித்தார்.