“இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை கூடாது”- டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு

Estimated read time 1 min read

சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் 200 பேருடன் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரங்கள் தவிர்த்து சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டிப்புடன் அறிவுறுத்திய ஆணையர், இரவு 10 மணிக்கு பிறகு சட்டவிரோதமாக மது விற்பனைக் கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

காவல்துறையினர், மதுவிலக்கு போலீசார் என யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும், காவல் துறையினர் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற எண்ணில் புகார் அளிக்கவும் சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.

You May Also Like

More From Author