சீன – அமெரிக்க உறவு சிறப்பாக அமைய சீனாவின் முக்கிய நலனை அமெரிக்கா மதிக்க வேண்டும்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்ட் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவனைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது ஷிச்சின்பிங் கூறுகையில், அமெரிக்கா சீனாவுடன் இணைந்து சரியான பாதையை நோக்கி முன்னேறி, மாறுபட்ட இரண்டு நாகரிகங்கள், மாறுபட்ட அமைப்புகள், மாறுபட்ட பாதை ஆகியவற்றைக் கொண்ட நாடுகளுக்கு இடையில் அமைதியான சகவாழ்வையும் கூட்டு வளர்ச்சியையும் பெறுவதற்குரிய சரியான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
சீனாவின் முக்கிய நலன்களை அமெரிக்கா பயனுள்ள முறையில் மதித்து, அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் காரணமாக சீன-அமெரிக்க உறவு பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். சீன-அமெரிக்க உறவு நிலையான மற்றும் எதிர்பார்க்கக் கூடிய திசையில் வளர்ந்து வருவதை உறுதிசெய்ய வேண்டும் எனச் சல்லிவனின் இப்பயணத்துக்கு முன்பாக, சீனா தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தது.
சீன மக்கள் இன்பமாக வாழ்கின்றனர் என்பது சீனாவின் வளர்ச்சி நோக்கம் இதுதான். அமெரிக்காவை மாற்றுவது அல்ல. அதே வேளையில், எந்தவொரு வெளிப்புற சக்தியும் சீன மக்களின் வளர்ச்சிக்கான உரிமையை பறிக்க முடியாது. அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் முக்கிய நலன்களையும் கூடக் கடுமையாக மீறியுள்ளன. சீனாவைக் கட்டுப்படுத்தவும் அடக்கவும் நினைக்கும் நெடுநோக்கு எண்ணத்தை அமெரிக்கா மாற்றிக் கொள்ளாவிட்டால் சீன-அமெரிக்க உறவு உண்மையில் சிறப்பாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.