தமிழக சட்டசபை கூட்டத்தொடரிர் போது இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அகவிலைப்படியை 2% உயர்த்தியதோடு பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதேபோன்று ஓய்வூதியதாரர்களுக்கும் பண்டிகைக்கால பணம் 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையிலும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு கால மகப்பேறு விடுப்பு அவர்களுக்கான தகுதி காண் பருவத்தில் (probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் அந்த விடுமுறையும் அவர்களுக்கான பணி அனுபவ காலத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.
மேலும் இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிக்கான பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்த விதிகளில் திருத்தம் செய்து அறிவித்துள்ளார்.