ஜனவரி 22ஆம் நாள் காலை 6 மணியளவில் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் லியாங்ஷூய் எனும் கிராமத்திலுள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 18 குடும்பங்களின் வீடுகள் புதைந்து 47பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சீற்றம் ஏற்பட்டதையடுத்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெரும் கவனம் செலுத்தி முக்கிய உத்தரவிட்டுள்ளார். மீட்புதவிப் பணிகளை வேகமாக ஒருங்கிணைத்து காணாமல் போனவர்களைத. தேடும் பணியை முழு மூச்சுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களின் உயிரிழப்பு மற்றும் பாதிப்பை இயன்ற அளவில் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.