பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

Estimated read time 1 min read

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள அந்த விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருதை பெற, குடும்பத்தோடு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் அஜித்குமார். இதற்காக, இன்று காலை சென்னை விமானயத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன, இதில் 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண், மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளடங்கும். அதன்படி, நடிகை ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோருக்கு வழங்க உள்ளார். மொத்தம் 19 பேர் இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர, பத்ம விபூஷண் விருது பெறுபவர்களில் லட்சுமிநாராயண சுப்பிரமணியம் (வயலின் கலைஞர், தமிழ்நாடு) போன்றவர்களும், பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் (கிரிக்கெட் வீரர்), குருவாயூர் துரை (யானை பராமரிப்பு), தாமோதரன் (கலைஞர்) உள்ளிட்டவர்களும் அடங்குவர்.

அஜித் குமார் :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அஜித் குமார், தனது திரைப்படங்கள் மூலம் பொழுதுபோக்கு துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருதைப் பெறுகிறார்.

நல்லி குப்புசாமி:

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நல்லி சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர், வியாபாரம் மற்றும் தொழில்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருதைப் பெறுகிறார்.

சோபனா:

பரதநாட்டியக் கலைஞரும், தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையுமான சோபனா, கலைத்துறையில் தனது பங்களிப்பிற்காக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author