பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

பசிபிக் பெருங்கடல் : உள்ள வனுவாடூ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதனை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு , நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தமாக சுமார் 330,000 மக்கள் வசிக்கும் 80 தீவுகளைக் கொண்ட ஒரு இடமாக வனுவாட்டு உள்ளது. இந்த சூழலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். உண்மையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? அல்லது இது வதந்தியா என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதைப்போலவே, இன்று மணிப்பூர் சுராசந்த்பூர் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வின் திறன் ரிக்டரில் 3.7ஆக பதிவு ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author