ஏப்ரல் 27ஆம் நாள் 23:54 மணிக்கு சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து சீனா லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் தியென்லியன் 2-05 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பிறகு, இது தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நுழைந்துள்ளது.
இச்செயற்கைக்கோள் சீனாவின் இரண்டாம் தலைமுறை புவி ஒத்திசைவான சுற்றுப்பாதை தரவு உணர்த்திச் செயற்கைக்கோளாகும்.
மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம், விண்வெளி நிலையம், நடுத்தர மற்றும் குறைந்த சுற்றுப்பாதை வள செயற்கைக்கோள் ஆகியவற்றுக்கு அது தரவு உணர்த்திச் சேவை, அளவீடு மற்றும் கட்டுப்பாட்டுச் சேவைகளை வழங்கும்.