மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 13 முதல் 17-ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால், ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மலை ரயிலில் ஏறி இயற்கை அழகை ரசித்தபடி பயணம் மேற்கொண்டனர்.