சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 29ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ஷாங்காய், சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க மையத்தைக் கட்டியமைப்பதற்கான முக்கிய கடமைக்குப் பொறுபேற்றுள்ளது.
ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளைக் கொண்டு, நாட்டின் நெடுநோக்கு திட்டத்துக்கு சேவை அளிக்கும் நோக்கில், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான முக்கிய ஆய்வுத் திறன், உயர் நிலை தொழில்களுக்கான முன்னணி செயல்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத் துறையில் உலகளாவிய செல்வாக்கு கொண்ட இடமாக ஷாங்காய் கட்டியமைக்கப்படுவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஷாங்காயில் பயணம் மேற்கொண்டபோது, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அடங்கிய ஒரு தொழில் பூங்காவில் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் முற்பகல் பார்வையிட்டார். அப்போது, ஷாங்காய் மாநகரில் செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி நிலவரத்தை அறிந்து கொண்ட அவர், தொழில்நுட்ப ஆய்வு, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் நிர்வாகம் குறித்த அறிமுகத்தைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, நுண்ணறிவு செயற்கை வளர்ச்சியில் ஷாங்காய் பெற்றுள்ள சாதனைகளை அவர் பாராட்டுவதாக கூறினார்.