சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் திங்கள், 38 நாடுகளைச் சேர்ந்த 15947 பேரிடம் 2 முறை நடத்திய கருத்து கணிப்புகளின்படி, டொனல்ட் டிரம்பின் ஆட்சிமுறைக்கான அமெரிக்கர்களின் மனநிறைவு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் புதிய அரசு நம்பிக்கையற்ற தன்மையை சந்தித்துள்ளது.
தரவுகளின்படி, இக்கருத்து கணிப்பில் பங்கெடுத்த 48.9 விழுக்காடான அமெரிக்கர்கள், புதிய அரசின் ஆட்சிமுறைக்கு மனநிறைவின்மை தெரிவித்தனர். டிரம்ப் அரசின் பரஸ்பர வரி விதிப்புக் கொள்கை, அமெரிக்கப் பங்கு சந்தையைக் கடுமையைகப் பாதித்துள்ளதாக 53.1 விழுக்காட்டினர் குற்றஞ்சாட்டினர்.
மேலும், “அமெரிக்கா முதன்மை” என்ற அமெரிக்க அரசின் கொள்கை, தனது கூட்டாளிகளின் நம்பிக்கையைச் சீர்குலைத்துள்ளது. அமெரிக்காவுடன் உறவு குறித்து, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்தனர். வளர்ந்த நாடுகளைத் தவிர, கருத்து கணிப்பில் பங்கெடுத்த 23 உலகளாவிய தெற்கு நாடுகளில், 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுடனான உறவின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.