சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 29ஆம் நாள் முற்பகல் ஷாங்காயிலுள்ள பிரிகஸ் புதிய வளர்ச்சி வங்கிக்குச் சென்று, இந்த வங்கித் தலைவர் தில்மா ரூசெஃபுவை சந்தித்துப் பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் உருவாக்கிய பலதரப்பு வளர்ச்சி நிறுவனமாக, பிரிகஸ் புதிய வளர்ச்சி வங்கி திகழ்கிறது. சீர்திருத்தம் மற்றும் உலக மேலாண்மையை மேம்படுத்துவதற்கான ஓட்டத்துக்கு இது ஏற்றதாக உள்ளது என்றார். மேலும், புதிய வளர்ச்சி வங்கியுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பசுமை, புத்தாக்கம், தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மேலதிக பயனுள்ள சாதனைகளைப் பெற சீனா விரும்புவதாக கூறினார்.
தவிரவும், உலக அமைதியைப் பேணிக்காப்பது, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவது, உலக மேலாண்மையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான முக்கிய ஆற்றலாக, உலகளாவிய தெற்கு நாடுகள் மாறியுள்ளன. சீனா தனது உரிமையையும், சர்வதேச சமூகத்தின் பொது நலன்களையும் பேணிக்காக்கும் என்றும் ஷி ச்சின்பிங் உறுதிபட கூறினார்.