சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஷாங்காய் மாநகரில் சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த இரண்டாவது சி919 ரக பெரிய பயணியர் விமானத்தை 17ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுகொண்டுள்ளது. காலை 10 மணிக்கு, இந்த விமானம் ஷாங்காய் புடொங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷாங்காய் ஹொங்சியாவோ சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. புதியதொரு விமானத்தின் வருகை, சி919 ரக விமானம் வணிக ரீதியில் இயங்குவது வேகமாகி வருகின்றது.