கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை நடைபெறுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் இருக்க வேண்டும் என்றும், கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களை கணக்கெடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கொடைக்கானல் சுங்கச்சாவடியில் தற்போது இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் பெருமாள் மலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.