இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக குழந்தைகள் கருத்தரித்தல் துறை நிபுணர் மருத்துவர் நிர்மலா விஜயகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணவுமுறைகள் குறித்தும், மாணவர்களின் வெற்றிக்காக பெற்றோர்களின் முக்கியத்துவம் குறித்தும் விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இவ்வாண்டில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் விருது, விளையாட்டு, மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை தாளாளர் புனிதா செல்வி, செயலாளர்கள் ஆகாஷ், ஆஷிஷ் லிங், முதல்வர் பிரவின்குமார் வாழ்த்தினர். பள்ளி தலைவர் முருகன் பெற்றோர் மற்றும் மாணவர்களின் கடமைகள் குறித்த விளக்கவுரை ஆற்றினார்.
விழாவின் உச்சமாக ஒட்டுமொத்த பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒருசேர மைதானத்தில் நிகழ்த்திய நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவு பெற்றது.