டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சென்றது.
எங்க டீமோட மிகப்பெரிய பலம் அவர்தான் : அஜின்க்யா ரஹானே
அதேவேளையில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்த டெல்லி கேபிட்டல்ஸ் 10 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 190 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறுகையில் :
இந்த போட்டியின் 13 ஆவது ஓவர் தான் போட்டி எங்கள் வசம் திரும்ப சாதகமாக அமைந்தது. சுனில் நரேன் வீசிய ஓவர்கள் அவர் எடுத்த விக்கெட்டுகள் தான் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 204 ரன்கள் என்கிற இலக்கு இந்த மைதானத்தில் எட்டக்கூடிய ஒன்றுதான். முதல் பாதியில் நாங்கள் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.
ஆனால் இரண்டாவது பாதியில் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாலே வெற்றி பெற்றோம். அதிலும் குறிப்பாக சுனில் நரேன் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருடைய மிகச்சிறந்த செயல்பாடு எங்கள் அனைவருக்கும் நம்பிக்கையை அளித்தது.
இதையும் படிங்க : கொல்கத்தா அணிக்கெதிராக நாங்க இவ்ளோ கிட்ட வந்த தோக்க இதுதான் காரணம் – அக்சர் படேல் வருத்தம்
கடந்த பல ஆண்டுகளாகவே எங்களது அணியின் சாம்பியன் பௌலராக அவர் இருந்து வருகிறார். அவரும் வருண் சக்கரவர்த்தியும் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். எங்கள் அணி வீரர்கள் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். ஒரு அணியாக நிச்சயம் நாங்கள் மீண்டும் மிக சிறப்பான செயல்பாட்டை இனியும் வெளிப்படுத்துவோம் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.