சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய முக்கிய கட்டுரை மே முதல் நாள் ஜியுஷி எனும் இதழிலில் வெளியிடப்படும். புதிய யுகத்தில் இளைஞர்கள் சீனப் பாணியிலான நவீனமயமாக்கலின் கட்டுமானத்திற்கு முக்கிய பங்காற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் தலைப்பாகும்.
கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களைச் சார்ந்திருக்க வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக் குழு சீரான பாரம்பரியத்தைப் பரப்புரை செய்து புத்தாக்கம் மற்றும் சீர்திருத்தத்தில் ஊன்றி நிற்க வேண்டும். வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்ற, இளையத் தலைமுறையைக் கட்சியுடன் இணைக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.