சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

Estimated read time 1 min read

2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சந்தானம் நடித்தார். அதையடுத்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்தில் நடித்து வந்தார் சந்தானம்.

இப்படத்தில் அவருடன் கவுதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற மே 16ம் தேதி அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்யும் ரிவியூவரான சந்தானம், திரைப்படத்துக்குள்ளேயே சிக்கிகொள்வது போலவும், அதனை தொடர்ந்து அங்கு நடக்கும் சம்பவங்களுமே படமாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. “ரிவியூ பண்றத விட்டுட்டு ரீல்ஸ் பண்ண போலாம்” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author