வெறும் 7 மாதத்தில் ரூ.17,252 கோடி கூடுதல் வருவாய்- சாதித்த விஜய் அரசு

Estimated read time 0 min read

தமிழக வரலாற்றில் இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெறும் 7 மாதங்களில் செய்து முடித்துள்ளது.

தமிழக அரசின் வரி வருவாய் வசூல் குறித்து வெளியாகியுள்ள அதிரடி புள்ளிவிவரங்கள், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,41,161.56 கோடியாக இருந்த தமிழகத்தின் வரி வருவாய், தற்போது ரூ.1,58,413.17 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.17,252 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வருடாந்திர இலக்கில் 50.61% மட்டுமே எட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 7 மாதத்தில் 54.76% எட்டப்பட்டுள்ளது. இது தமிழக நிதி நிர்வாகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

முந்தைய ஆட்சியாளர்களை காட்டிலும் தற்போது அரசுக்கு வர வேண்டிய ஒவ்வொரு ரூபாயும் இப்போது முறையாக கணக்கில் சேருகிறது. வரி வசூலில் முழு வெளிப்படைத்தன்மை! இடைத்தரகர், கமிஷன், முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு வருவாய் மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வெறும் 7 மாதத்தில் ரூ.17,252 கோடி கூடுதலாக வந்திருக்கிறது என்றால், இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை பெருமளவில் குறைந்து, கடன் மேலாண்மையில் இந்தியாவிலேயே முன்னுதாரண மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் தவெக ஆதரவாளர்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author