சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் மக்கள் மாமண்டபத்தில் தொடங்கியது. சீனாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த சுமார் 3000 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தொடரில் சீன அரசின் பணியறிக்கை சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சித் திட்டம் அறிக்கை, மத்திய அரசு மற்றும் பிரதேசங்களின் வரவு செலவு அறிக்கை, அதி உயர் மக்கள் நீதி மன்றம் மற்றும் மீயுயர் அரசு மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கைகள் உள்ளிட்டவை பரிசீலனை செய்யப்படும்.
2025ஆம் ஆண்டு, சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாகும். மேலும், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை ஏற்பாடு செய்யும் ஆண்டாகவும் விளங்குகிறது. இவ்வாண்டின் இக்கூட்டத்தொடரில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.