வந்தவாசியில் திமுகவினர் நடத்திய நூதன போராட்டம்..!!! 

Estimated read time 1 min read

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகாரில் சிக்கியுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி, திமுக மாவட்ட மாணவரணி சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில் குற்றவாளியைப் பாலத்தில் தலைகீழாகத் தொங்கவிடுவது போன்ற காட்சியைப் போலவே சித்தரித்து, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் உருவபொம்மையை அங்கிருந்த பாலத்தில் தொங்கவிட்டுத் திமுகவினர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பாலத்தில் இவ்வாறு எம்.எல்.ஏ-வின் உருவபொம்மை தொங்கவிடப்பட்ட சம்பவம் வந்தவாசிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் பலரும் திரண்டு இதனைக் கவனித்தனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த உருவபொம்மையை அங்கிருந்து மீட்டு அப்புறப்படுத்தினர். மேலும், அனுமதியின்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author