முதலீட்டாளர்கள் மாநாடு.. 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது..!

Estimated read time 1 min read

சென்னையை அடுத்த கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (நவ.25) 2ஆவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்ற 2ஆவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில், 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன் மூலம் ரூ.58,214 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களையும் சேர்த்து இதுவரை 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடுகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author