சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக் குழு, அனைத்து சீன இளைஞர் சம்மேளனம் ஆகியவை, 30 பேருக்கு 2025ஆம் ஆண்டு சீன இளைஞர்களுக்கான வூசி எனும் பரிசுகளையும், 30 இளைஞர் குழுகளுக்கு சீன இளைஞர்களுக்கான வூசி குழு எனும் பரிசுகளையும் வழங்கின. வாங் சொங்பாங் உள்ளிட்ட 677 பேருக்கு 2025ஆம் ஆண்டு புதிய யுகத்தின் இளைஞர்கள் முன்னோடி பரிசுகள் வழங்கப்பட்டன.
அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், கிராமப்புறத்தின் மறுமலர்ச்சி, பசுமையான வளர்ச்சி, சமூகச் சேவை உள்ளிட்ட துறைகளில் கௌரவம் சூட்டப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள், புதிய யுகத்தில் சீனாவின் பல்வேறு துறைகளின் இளைஞர்களுக்கான முன்மாதிரிகள் மற்றும் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.