டிடிவி ஷாக்..!!தவெகவில் இணைய உள்ள அமமுக MLA காமராஜ்!

Estimated read time 1 min read

2026 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். காமராஜ், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் மே 12, 2026 அன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது எம்எல்ஏ பதவியைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி அமமுக சார்பில் ஜூலை 24, 2026 அன்று சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதற்குத் தனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என்றும், உரிய சூழ்நிலை வரும்போது அனைவரிடமும் சொல்லிவிட்டு அக்கட்சியில் இணைவேன் என்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி அமமுக MLA காமராஜ்,சூழ்நிலை வரும்போது தவெகவில் இணைவேன் எனக் கூறி TTV தினகரனுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் தான் நிறைய திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. தவெகவில் இணைய எந்தவித நெருக்கடியும் எனக்கு கிடையாது. எந்த நெருக்கடியும் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் ஒரு தனி MLA எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் விரைவில் தவெகவில் இணையப்போவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author