வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர் என்றும் ராய்ட்டர்ஸ் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது.