புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையும் உலகமும் என்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் மத்திய பரப்புரை துறையின் அமைச்சருமான லீ ஷுலெய் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையை ஆய்வு செய்வது, நவீன சீனாவை அறிந்து கொள்ளும் முக்கிய வழிமுறையாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி தலைமை தாங்கிய சீனா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. ஆட்சி முறை குறித்து பல்வேறு நாடுகளின் கட்சிகளுடன் பரிமாற்றம் மேற்கொள்ள விரும்புகிறோம் என்றார்.
