இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மே 10ஆம் நாள் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது தோவல் கூறுகையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவில் கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டது. அதற்கு இந்தியா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது.

போர் இந்தியாவின் தேர்வு அல்ல. எந்தவொரு தரப்பின் நலன்களுக்கு ஏற்புடையதல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்காக இலக்குநிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

வாங்யீ கூறுகையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சீனா கண்டிக்கிறது. எந்த வடிவ பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்க்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெயர முடியாத அண்டை நாடுகளாக திகழ்கின்றன. போர் இந்தியாவின் தேர்வு இல்லை என்பதை சீனா வரவேற்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுபாட்டுடன் செயல்பட்டு பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் வேற்றுமைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று சீனா உண்மையாகவே விரும்புகிறது.

இரு நாடுகளும் கலந்தாய்வு மூலம் விரிவான மற்றும் நீண்டகால போர் நிறுத்தத்தை நனவாக்குவதை சீனா ஆதரிக்கின்றது. இது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியதாகவும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

தவிரவும், பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாருடன் வாங்யீ மே 10ஆம் நாள் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.

You May Also Like

More From Author