சீன அரசுத்தலைவரின் ரஷியப் பயணம் குறித்த வெளியுறவு அமைச்சரின் அறிமுகம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் ரஷியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார். இப்பயணம் நிறைவடைந்ததையடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சீன அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் ஷிச்சின்பிங் 11ஆவது முறை மேற்கொண்ட ரஷியாவில் பயணம் இதுவாகும், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் கொண்டாட்டத்தில் அவர் மீண்டும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியப் பயணத்தின்போது, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 20க்கும் மேற்பட்ட பலதரப்பு சார் நிகழ்வுகளில் பங்கெடுத்தார் என்று வாங்யீ தெரிவித்தார்.

மேலும், நெடுநோக்கு திட்டத்தின் வழிகாட்டலை வலுப்படுத்தல் மற்றும் சீன-ரஷிய உறவு நிதானமாகவும் சீராகவும் முன்னேறுவதை தூண்டுதல், வரலாற்று நினைவுகளைப் பாதுகாத்தல் மற்றும் 2ஆவது உலகப் போர் வெற்றி பெற்றதன் சாதனைகளை உறுதியுடன் பாதுகாத்தல், பெரிய நாடுகளின் பொறுப்புகளைச் செயல்படுத்துதல் மற்றும் பரந்த சர்வதேச ஒருமித்த கருத்துகளை உருவாக்குதல் ஆகிய மூன்று அம்சங்கள் பற்றி வாங்யீ விளக்கமளித்தார்.

 

You May Also Like

More From Author