காமன்வெல்த் விளையாட்டு 2026: தங்கம், வெள்ளிகளுடன் 6 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்த இந்தியா  

Estimated read time 1 min read

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரின் 5-வது நாளில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஒரே இரவில் 6 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
தடகளம், பாரா தடகளம் மற்றும் பளுதூக்குதல் ஆகிய பிரிவுகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளனர்.
ஆண்களுக்கான உயரம்தாண்டுதல் போட்டியில் இந்திய தேசிய வீரர் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் காமன்வெல்த் உயரம்தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதேவேளையில், மகளிர்களுக்கான F57 குண்டு எறிதல் பிரிவில் ஷர்மிளா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றித் அசத்தினார்.
இவருடன் போட்டியிட்ட ஷில்பா ஷைலா வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைளித்தார்.

You May Also Like

More From Author