பிப்ரவரி 12ஆம் நாள் பிற்பகல் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என். மற்றும் ஹெய்லொங்ஜியாங் மாநிலத்திலுள்ள சி.ஜி.டி.என்.செய்தியாளர்கள் பிரிவு ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த விளக்கு விழா தொடர்பான சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வு 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான செய்தி மையத்தில் நடைபெற்றது. இதில் ஆசியாவின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், செய்தி ஊடகப் பணியாளர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு, உலகத்தின் கவனத்தை ஈர்த்து, பல்வேறு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் சர்வதேசப் புகழையும் செல்வாக்கையும் மேலும் விரிவாக்கியுள்ளது.
விளக்கு விழா தொடர்பான சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை
![](https://puthiyathisaigal.com/wp-content/uploads/2025/02/310842142db94e219a9119854fc6241e.png)