காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை என இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பதுபோல் வளர்த்தெடுத்து வருகிறது.
பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். பஹல்காமில் தாக்குதல் நடத்திய TRF பயங்கரவாத அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஐ.நா. அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தை வளர்த்து வரும் ஒரு நாடு, அதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது.
உலக அளவில் பல பொதுமக்கள் மரணத்திற்கு காரணமான பயங்கரவாத உட்கட்டமைப்பு அழித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தினால், இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சனைகளையும் இருதரப்புதான் தீர்க்க வேண்டும். காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை” என்றார்.