இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
இது நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய விதியின்படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் மொபைல் போன்களில் பெறப்படும் செய்திகளைக் கண்காணிப்பதை மேம்படுத்தும் வகையில் செய்திகளைக் கண்டறியும் திறனை (Message Traceability) செயல்படுத்த வேண்டும்.
இது பயனர்களுக்கு விளம்பரச் செய்திகள் மற்றும் அழைப்புகளை அடையாளம் காண உதவும், மோசடி அபாயத்தைக் குறைக்கும்.
இந்த முயற்சியானது இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டாலும், முக்கியமான வங்கிச் செய்திகள் மற்றும் OTP களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலைகள் உள்ளன.