சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட 2025-ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் ஜனவரி 19-ஆம் நாள் நடைபெற்றது.
இந்த அரங்கேற்ற நிகழ்ச்சிகள் தொழில் நுட்பங்களின் புத்தாக்கம், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் அரங்குகள் ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
2025-ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி, ஜனவரி 28ஆம் நாளிரவு 8 மணிக்கு நேரலையின் மூலம் ஒளிப்பரப்பப்படும்.
அதோடு, சி.ஜி.டி.எனின் ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட 82 மொழிகளிலும், உலகளாவிய 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 2600க்கும் மேலான முக்கிய ஊடகங்களிலும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.