சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தில் கலந்துகொண்ட கொலம்பிய அரசுத் தலைவர் குஸ்டாவோ பெட்ரோவுடன் சந்தித்துரையாடினார்.
லத்தீன் அமெரிக்காவில் கொலம்பியா ஒரு முக்கிய நாடாகும். நெடுநோக்கு பார்வையிலும் நீண்டகால பார்வையிலும் ரீதியில் இரு தரப்புறவை சீனா அணுகுகிறது. இவ்வாண்டு, இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும்.
இந்த புதிய வரலாற்று துவக்கத்தில், கொலம்பியாவுடன் இணைந்து கூட்டாகப் பாடுபட்டு, இரு நாடுகளுக்கிடையில் நெடுநோக்குக் கூட்டாளியுறவின் மாபெரும் வளர்ச்சியைத் தூண்டி, இரு நாடுகளுக்கு மேலும் சீராக நன்மை பயக்க விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.