கென்ய மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார்

பெய்ஜிங் ஜியாடொங் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கென்யாவின் மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அனுப்பிய கடிதத்துக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பி, சீன-கென்யா மற்றும் சீன-ஆப்பிரிக்க நட்பு லட்சியத்தில் தொடர்ந்து பங்கெடுக்க வேண்டுமென அவர்களுக்கு ஊக்கமளித்தார்.

எதிர்காலத்தைப் பார்க்கும் போது, ஒரு மண்டலம் ஒரு பாதை என்ற திட்டம், சீன-கென்ய முழுமை நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு ஆகியவற்றுக்கு மேலதிக திறமைமிக்க இளைஞர்களின் பங்கு தேவைப்படுகிறது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன், இப்பல்கலைக்கழகத்தின் கென்யாவின் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் கூட்டாக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு கடிதம் அனுப்பினார்.

இருப்புப்பாதை நிர்வாக அறிவுகளைக் கற்றுக்கொள்ள சீனாவுக்கு வந்ததுருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கென்ய-சீன நட்புறவுக்கான நிலையான பாலமாக மாற வேண்டும் என்றும் அவர்கள் கடித்ததில் விருப்பம் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author