ஹைட்ரஜன் எரியாற்றல் மற்றும் அணுப் பிளப்பு உள்ளிட்ட 6 பெரிய எதிர்கால தொழில்களின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் வகுக்க வேண்டுமென சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, தற்போது சீனாவின் ஹைட்ரஜன் எரியாற்றல் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பல தொழில்நுட்ப குறியீடுகள் உலகின் முன்னணியில் உள்ளன. சீனாவின் ஹைட்ரஜன் எரியாற்றல் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2லட்சத்து 20ஆயிரம் டன்னைத் தாண்டி அது உலகின் 50விழுக்காட்டுக்கு மேல் வகித்துள்ளது. கட்டியமைக்கப்பட்ட ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை 540ஐ எட்டியுள்ளது. இது, உலகில் 40விழுக்காடு வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஹைட்ரஜன் எரியாற்றலின் பெரிய அளவிலான வளர்ச்சியைச் சீனா விரைவுபடுத்தவுள்ளது. தொடரவல்ல எரியாற்றலான ஹைட்ரஜன் உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் திறன் 100GW எட்ட முயற்சி செய்யும் என்றும், ஹைட்ரஜன் எரியாற்றல் தொழிலின் முழுமையான தொழில்நுட்ப புத்தாக்க முறைமையையும் பசுமை எரியாற்றலான ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் விநியோக முறைமையையும் உருவாக்கச் சீனா பாடுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
