சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட செய்தியின்படி, இவ்வாண்டின் ஜனவரி 28ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 4ஆம் நாள் வரை வசந்த விழாவின் போது, சீனத் தேசியளவில் பழைய நுகர்வுப் பொருட்களுடன் புதியவற்றை வாங்கும் பரிவத்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வாகனம், வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், செல்லிடபேசி உள்ளிட்ட எண்ணணு பொருட்களின் விற்பனை எண்ணிக்கை 86 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் விற்பனை தொகை 3100 கோடி யுவானை எட்டியுள்ளது.
வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள் மற்றும் செல்லிட பேசிகளின் விற்பனை வருமானம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 166 விழுக்காடும் 182 விழுக்காடும் அதிகரித்துள்ளது.