உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு கோடை விழாவில் மலர்க் கண்காட்சியை காண வரும் பயணிகளை கவர, பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில், அரண்மனை, ராஜா சிம்மாசனம், ராணி, அரண்மனைக் காவலர்கள், யானை, புலி, அன்னப் பறவை, கல்லணை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட மலர் அலங்கார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இரண்டு லட்சம் மலர்களை கொண்டு 24 அடி உயர, 90 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான தஞ்சாவூர் அரண்மனை வடிவமைப்பு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கும் பணியும் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.