ஐ.நாவின் யூனெஸ்கோவின் 47ஆவது உலக மரபுச் செல்வ மாநாடு 11ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. சீனாவின் சி சியா கல்லறை உலக மரபுச் செல்வ பட்டியலில் சேர்ப்பது என்பது இம்மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
மிக பெரியளவான மிக உயர்நிலையான மிக முழுமையாக பாதுகாக்கப்பட்ட சி சியா வம்சத்தின் அடையாளம் சி சியா கல்லறையாகும். சி சியா வம்சம், பண்டைகாலத்தில் பட்டுப்பாதையில் மையப் பகுதியில் அமைந்தது என்பதை இது நிரூபித்தது.
பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறையின் துணை அமைச்சரும் தேசிய மரபுச் செல்வ பொருள் பணியகத்தின் தலைவருமான ராவ் ச்சுவன் சீன அரசின் சார்பாக இம்மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,
சீன அரசு, உலக மரபுச் செல்வ பொது ஒப்பந்தத்தின் பொறுப்பை ஏற்று பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் செல்வங்களின் மீதான பாதுகாப்பை வலுப்படுத்தி, மனித குலத்தின் பண்பாட்டு செல்வங்களைப் பேணிக்காக்கும் என்றார்.