அரசியலில் குதித்த ராகவா லாரன்ஸ்! தவெக சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியா?  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள இத்தொகுதியின் இடைத்தேர்தலில், தவெக சார்பில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவி வந்த அரசியல் யூகங்களுக்கு அவரே இன்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் அரசியலில் ஈடுபட எண்ணம் இருப்பதாகவும், இருப்பினும், ரசிகர்கள் கருத்தை பொறுத்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தற்போது ஆட்சியமைத்துள்ள விஜய்க்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author