சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் என 64 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 64 பொறியாளர்கள் இடமாற்றம்.
சென்னை மாநகராட்சியில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், அங்கு பணியாற்றி வரும் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 64 பேரை ஒரே நாளில் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.சமீரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஏற்கனவே 50 அதிகாரிகள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 64 பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
