உலக அளவில் 1/4 வேலை வாய்ப்புகள் AIஆல் பாதிக்கப்படும்

Estimated read time 0 min read

உலக அளவில் நான்கில் ஒரு பகுதி வேலை ய்ப்புகள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படக் கூடுமென சர்வதேச தொழிலாளர் அமைப்பு 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், உயர் வருமானமுடைய நாடுகளின் வேலை வாய்ப்புகள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் விகிதம் 34விழுக்காட்டை எட்டக் கூடுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தத்துவ ரீதியில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு மூலம், பல்வேறு பணிகளைத் தானியக்க முறையில் நிறைவேற்ற முடியும் என்பதால், அலுவலக வேலை வாய்ப்புகள் வெகுவாக குறையும்.

உற்பத்தித் திறன் மற்றும் வேலை வாய்ப்புகளின் தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு நாடுகளின் அரசுகள், முதலாளி மற்றும் தொழிலாளர் அமைப்புகள் சமூக பேச்சுவார்த்தையில் பங்கேற்றி ஆக்கப்பூர்வமான, உள்ளடக்க தன்மையுடன் கூடிய நெடுநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டுமென இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author