அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஹுவாங் சியாவ்வெய் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, இந்தியாவின் கொச்சியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் மகளிர் விவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, புதிய யுகத்திற்கு சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனையின் கால மதிப்பு மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தை அறிமுகம் செய்த அவர், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து 4 உலகளாவிய முன்மொழிவுகளைச் செயல்படுத்தி, நடைமுறை ஒத்துழைப்பின் மூலம் பெண்களின் வளர்ச்சிக்கு இயக்காற்றலை வழங்கவும், கலாசாரப் பரிமாற்றத்தின் மூலம் நாகரிகங்களிடையே பரஸ்பர கற்றலை ஊக்குவிக்கவும், கூட்டு செயலின் மூலம் உலகளாவிய மகளிர் உச்சிமாநாட்டின் சாதனையை செயல்படுத்தி மனிதகுலத்திற்கான பொது எதிர்கால சமூகத்தை நோக்கி கூட்டாக முன்னேறவும் சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சீனப் பிரதிநிதிக் குழு சீனாவின் வளர்ச்சி சாதனைகளை ஆக்கப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் மகளிர் விவகார அமைச்சர்கள் கூட்டத்தில் சீனப் பிரதிநிதிக் குழு பங்கேற்பு
You May Also Like
More From Author
சீனத் தொழில் நிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பு
August 27, 2026
சீன விடுமுறை நாட்களில் சுற்றுலா செலவு 4035கோடி யுவான்
June 10, 2024
