‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுடன் அட்லீ இயக்கும் புதிய மெகா ப்ராஜெக்ட்டில் முதன்மை கதாநாயகியாக இணைகிறார்.
PeepingMoon வெளியிட்டுள்ள செய்தியின்படி, 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் மூலம், ‘ஜவான்’ படத்துக்குப் பிறகு அட்லீ மற்றும் தீபிகா இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர்.
ஏற்கனவே மிருணாள் தாக்கூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுக்கான தேர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்!
