காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திடீர் டெல்லி பல்கலைக்கழக (DU) வருகை கல்வி நிறுவனத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்அறிவிப்பு இன்றி வந்த அவரின் வருகை, பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கடுமையாக கண்டிக்கபட்டது.
இது “நிறுவன நெறிமுறை மீறல்” என்றும், மாணவர் நிர்வாக நடவடிக்கைகளில் இடையூறு விளைவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது ஒரு மணி நேர பயணத்தின்போது, ராகுல் காந்தி SC/ST/OBC மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கல்வி சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து பேசிய இந்த சந்திப்பு, ‘சிக்ஷா நியாய் சம்வாத்’ தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த நேரத்தில், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) அலுவலகத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, அணுகலைத் தடை செய்ததாக பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்?
