தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒரிசா – மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) கனமழை பெய்யக்கூடும்.
வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
