சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 23ம் நாள் மாலை, ஜெர்மனி தலைமை அமைச்சர் மெர்ஸுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சுமுகமான நிலையான சீன-ஜெர்மனி உறவு, இரு நாட்டு நலன்களுக்கும், சீன மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது. ஜெர்மனியுடன் இணைந்து, பன்முகங்களிலும் நெடுநோக்கு கூட்டாளியுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
சீனாவும் ஜெர்மனியும் அரசியல் நம்பிக்கையையும், இரு தரப்புறவின் உறுதி தன்மையையும் வலுப்படுத்தி, ஒத்துழைப்புக்கான உந்து சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இவ்வாண்டு, சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும், சீன-ஐரோப்பிய உறவு வளர்ச்சியின் வெற்றி அனுபவங்களைத் தொகுத்து, பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்தைப் பேணிக்காத்து, திறப்பு மற்றும் ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டுள்ளார்.