வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

Estimated read time 0 min read

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலவியது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்துள்ளது. இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author