நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார்.

நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் இன்று அவர் பிரச்சாரம் செய்கிறார்.

காலை 11 மணி அளவில் பீகார் மாநிலம் நவாடாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

பின்னர் மத்திய பிரதேச மாநிலத்திற்கு செல்லும் பிரதமர்  ஜபல்பூர் தொகுதியில் நடைபெறும் ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார்.

You May Also Like

More From Author