புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
* அறந்தாங்கியில் இருக்கக்கூடிய வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
* கீரமங்கலம் விவசாயிகள் நலன் கருதி, அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை சேமிக்க ரூ. 1.16 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
* வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.
* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.
* கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @KN_NEHRU @regupathymla @OfficeOfKRP @SMeyyanathan @mp_saminathan @sivasankar1ss @Anbil_Mahesh pic.twitter.com/1FlJ5QaNvh
— TN DIPR (@TNDIPRNEWS) November 10, 2025
